தினமணி November 29, 2009
சமச்சீர் கல்விக்காக மாணவர்கள் போராட வேண்டும்: ராமதாஸ்

கடலூர், ஆக. 9: தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வியை வலியுறுத்தியும் கட்டணக் கல்வியை எதிர்த்தும் மாணவர்கள் போராட வேண்டும் என்று, பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் வலியுறுத்தினார். சமச்சீர் கல்வியை வலிறுத்தியும், கட்டாயக் கல்விக் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்தக் கோரியும், தமிழக மாணவர் சங்கம் சார்பில் கருத்தரங்கம் கடலூர் முதுநகரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
கருத்தரங்கில் ராமதாஸ் பேசியது:
தமிழ்நாட்டில் ஏழைகள், நடுத்தர மக்கள், பணக்காரர்களுக்கு என்று தனித்தனியே கல்வி உள்ளது. அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும். அதைக் கொடுக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. பாடப் புத்தகங்களின் சுமை குறைய வேண்டும். கட்டாயக் கல்வி, கட்டணம் இல்லாக் கல்வி, தரமான கல்வி, சுமையற்ற கல்வி, சுகமான கல்வி ஆகியவை தேவை. தனியார் கல்லூரிகளில் அநியாயக் கட்டணம் வசூலிக்கிறார்கள். கல்வி கடைச் சரக்காக மாறிவிட்டது. மாநிலக் கல்வித் திட்டம், மெட்ரிக் கல்வித் திட்டம், சி.பி.எஸ்.இ. கல்வித் திட்டம், ஆங்கிலோ இந்திய கல்வித் திட்டம், பன்னாட்டு கல்வித் திட்டம் என்ற 5 விதமாக தமிழ்நாட்டில் தான் உள்ளது. இவை ஒழிக்கப்பட்டு மாநிலப் பாடத்திட்டம் வேண்டும். ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் 77.5 சதவீத இடங்களை 5 உயர் சாதியினர் அனுபவித்து வந்தனர். இது அநியாயம் என்று பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு கேட்டுப் போராடினோம். இதற்கு தமிழகத்தில் எங்களைத் தவிர யாரும் குரல் கொடுக்கவில்லை. போராடிப் பெற்றோம். தமிழ்நாட்டில் ஏழை மாணவர்கள் நுழையா நிலை, நுழைவுத் தேர்வால் ஏற்பட்டது. நுழைவுத் தேர்வை எதிர்த்து நாங்கள் போராடி வெற்றி பெற்றோம் என்றார் ராமதாஸ்.
கருத்தரங்கில் பாமக தலைவர் ஜி.கே.மணி, தி.வேல்முருகன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ ஆர்.கோவிந்தசாமி, தமிழக மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பிரபு உள்ளிட்டோர் பேசினர்.
சமச்சீர் கல்வியை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும், அரசு நிர்ணயக் கட்டணத்துக்கு மேல் வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:
Post a Comment