மாநில திட்டக் குழு அறிக்கைபடி சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும்: ராமதாஸ்
25 Sep 2009 11:16:00 PM
சென்னை, செப். 24: மாநில திட்டக் குழு அறிக்கையில் கூறியுள்ளபடி சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்த முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார். சமச்சீர் கல்வி குறித்த முத்துக்குமரன் குழு பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்தக் கோரி தமிழக மாணவர் சங்கம் சார்பில் சென்னையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது: சமுதாயத்தில் உள்ள எல்லா மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைத்திடும் வகையில் பொதுப்பள்ளி முறை, அருகாமைப் பள்ளி முறை, தாய்மொழி வழிக் கல்வி முதலானவற்றை உள்ளடக்கியதே சமச்சீர் கல்வி முறையாகும். இந்த முறை குறித்து அதிகாரிகளுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் சமச்சீர் கல்வி முறை குறித்து முழுமையாக புரிந்து கொண்டவர் முதல்வர் கருணாநிதி. எனினும் சமச்சீர் கல்வி முறையை முழுமையாக அமல்படுத்த தமிழக அரசு தயாராக இல்லை. சமச்சீர் கல்வி முறை குறித்த தமிழக அரசின் இப்போதைய அறிவிப்பு அக்கல்வி முறைக்கு எதிரானதாக உள்ளது. இதனால் மாணவர்களுக்கு எந்தப் பயனும் கிடைக்காது. வளர்ந்த நாடுகள் பலவற்றிலும் சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்படுகிறது. ஆனால் நமது இப்போதைய கல்வி முறை ஏழை, பணக்காரர் என பாகுபாடு செய்யும் முறையாக உள்ளது. எனவே தமிழக அரசு உண்மையான சமச்சீர் கல்வியை அளிக்க முன்வர வேண்டும். அதற்கு முத்துக்குமரன் குழு பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும். அரசுப் பள்ளிகளில் தரமான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், போதுமான ஆசிரியர்கள் நியமனம் ஆகியவற்றுக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக திட்டக் குழு என்பது முதல்வர் கருணாநிதியை தலைவராகக் கொண்டு செயல்படுகிறது. அக்குழுவின் சார்பில் அதன் துணைத் தலைவர் பேராசிரியர் நாகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் சமச்சீர் கல்வியின் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே திட்டக் குழு அறிக்கையில் கூறியுள்ளவாறு சமச்சீர் கல்வியை அமல்படுத்த கருணாநிதி முன்வர வேண்டும் என்றார் ராமதாஸ்.
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் ஆர். பிரபுரதன் தலைமை வகித்தார். பா.ம.க. தலைவர் கோ.க. மணி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பேசினர்.

No comments:
Post a Comment