Tuesday, December 1, 2009

தமிழகமெங்கும் மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு

October 21, 2008

செய்தி அறிக்கை – 21.10.08

ஈழத் தமிழர்களை படுகொலை செய்யாதே!
சிங்கள அரசுக்கு ஆயுதங்கள் வழங்காதே!!

அக்டோபர் 24-இல் தமிழகமெங்கும் மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு

அனைத்து மாணவர் கூட்டமைப்பு அறிவிப்பு

சென்னையில் அக்டோபர் 20-ஆம் தேதி நடைபெற்ற அனைத்து மாணவர் கூட்டமைப்பு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வரும் முதல் கட்டமாக அக்டோபர் 24-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகத்தின் அனைத்து கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

அதைத் தொடர்ந்து அந்தந்த கல்லூரிகளின் முன்பு கருப்புக் கொடி ஏற்றி, ஈழத் தமிழர்களின் இன்னல்களை விளக்கி ஆர்ப்பாட்டமும் நடைபெறவுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கல்லூரி மாணவர்களும் இதில் பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த மாணவர்கள் காலையில் வகுப்புப் புறக்கணிப்பிலும், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்ட பிறகு, மாலை சென்னையில் தமிழக அரசு சார்பில் நடைபெறவுள்ள மனித சங்கிலியில் பங்கெடுத்து நமது உணர்வை வெளிப்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாணவர்களின் அடுத்த கட்ட போராட்டம் குறித்து அக்டோபர் 25-ஆம் நாள் கூடும் கூட்டு நடவடிக்கைக் குழு விவாதித்து முடிவு செய்யும்.

- அனைத்து மாணவர் கூட்டமைப்பில்
ஒருங்கிணைந்துள்ள மாணவர் அமைப்புகள்
(அகர வரிசைப்படி)

அனைத்திந்திய மாணவர் பெரு மன்றம் (AISF)
இளைஞர் இயக்கம்
திராவிடர் மாணவர் கழகம் (தி.க)
திராவிட முன்னேற்றக் கழக மாணவரணி
தமிழக மாணவர் சங்கம் (பா.ம.க)
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாணவரணி
முற்போக்கு மாணவர் கழகம் (வி.சி)
மற்றும் அனைத்துக் கலை, அறிவியல்,
மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகள்,
பல்கலைக் கழகங்களின் மாணவர்கள்


October 22, 2008 English Version of the Resolutions

RESOLUTIONS PASSED AT THE INAUGURAL MEETING OF THE
CONFEDERATION OF ALL STUDENTS HELD ON 20 OCTOBER 2008, CHENNAI

1. Formation of the Confederation of All Students
Eelam Tamils are being massacred in a genocidal pogrom undertaken by the Sinhalese majoritarian forces through state terrorism. It has become imperative for the students of Tamil Nadu to rally together for their brethren with whom they share an emotional and historical umblical cord. The fifty-year war to exterminate the Tamil people has today reached a critical flashpoint. Because of Tamil sentiments and humaneness, all organizations have started coming together to fight for their brothers and sisters who are being abducted, killed and raped. One can palpably feel the students’ awakening and uprising in this state. If such an uprising has to achieve complete victory, it is the duty of all students and student movements in Tamil Nadu to join hands and enter the public arena in order to capture the International Community’s attention. Having realized this need, all student organizations have decided to jointly work under the name of the “Confederation of All Students.”

As the first stage, the following student organizations have agreed to work together for this issue:

1. All India Student Federation (AISF)
2. Dravidar Maanavar Kazhagam (Dravidar Kazhagam)
3. Dravida Munnetra Kazhagam (DMK) Students Wing
4. Ilaignar Iyakkam
5. MDMK Student’s Wing
6. Murpokku Maanavar Kazhagam (Viduthalai Chiruthaigal Katchi)
7. Tamizhaga Maanavar Sangam (Paattali Makkal Katchi)

and student organizations from various arts, law, engineering and medical colleges.


No comments:

Post a Comment